கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை


கிருஷ்ணகிரி அருகே  கட்டிட மேஸ்திரி தற்கொலை
x

கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, ஜோதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story