ஆயில்பட்டியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


ஆயில்பட்டியில்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

ஆயில்பட்டியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளிபட்டி பகுதிைய சேர்ந்தவர் பூபதி (வயது 27). திருமணமாகவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்ைச பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பூபதி ஆயில்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற ஆயில்பட்டி போலீசார் இறந்த பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story