பர்கூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பர்கூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
மத்தூர்:
பர்கூர் தாலுகா சிவம்பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி பாரதி (வயது27). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதி இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால மனமுடைந்த பாரதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story