கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை
ஓசூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:
ஓசூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
கிணற்றில் பிணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பிள்ளைகொத்தூர் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் மிதந்தது. இதுகுறித்து கிராமமக்கள் காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
என்ஜினீயர்
அப்போது கிணற்றில் பிணமாக கிடந்தவர் ஒரப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. என்ஜினீயரான இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.