விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

பொம்மிடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ராமதாஸ் நகரை சேர்ந்தவர் ராமன் (வயது 47). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் ராமனுக்கும், இவரது மனைவி மாசிலாமணிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மாசிலாமணி கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் விரக்தி அடைந்த ராமன் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னா் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story