சென்னிமலை அருகே பட்டதாரி இளம்பெண் தற்கொலை


சென்னிமலை  அருகே பட்டதாரி இளம்பெண் தற்கொலை
x

சென்னிமலை அருகே பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இளம்பெண்

சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவருடைய இளைய மகள் மோகனராணி (வயது 26). பி.காம் பட்டதாரி. திருமணம் ஆகாதவர். இவர் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். மோகனராணிக்கு சிறு வயது முதல் உடல் நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த மோகனராணி வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார்.

விஷம் குடித்தார்...

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி காலை வீட்டில் இருந்த மோகனராணி தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்துவிட்டார். உடனே அவரை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மோகனராணி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story