பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 36). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சவுமியா. இவர், குடும்ப பிரச்சினை காரணமாக சிவராஜை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் சிவராஜ் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிவராஜ் திடீரென விஷம் குடித்தார். இதுகுறித்து அவர் தனது தம்பி திருஞானசம்பந்த மூர்த்திக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். உடனடியாக அவர் வந்து, சிவராஜை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவராஜ் இறந்தார். இந்த தற்கொலை குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.