தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
x

நன்னிலத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

நன்னிலத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜோதி, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் அரவிந்த் (வயது21). தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லூரி சென்று விட்டு வீட்டுக்கு வந்த இவர், அறைக்குள் சென்று விட்டு, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய், அறைக்கு அருகே சென்று பார்த்தபோது கதவு உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அரவிந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story