பரமத்தி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்தி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல்
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (வயது 53). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பாயி. செங்கோட்டுவேலு கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை குப்பாயி கண்டித்ததாக கூறப்படுகிறது. கடந்த 25-ந் தேதி மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செங்கோட்டுவேலு இறந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story