விஷம் குடித்த தொழிலாளி தற்கொலை
மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அ. மல்லாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 59). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 25-ந் தேதி மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த கோவிந்தன் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story