காவிரி ஆற்றில் குதித்து சலூன் கடைக்காரர் தற்கொலை அந்தியூரை சோ்ந்தவர்


காவிரி ஆற்றில் குதித்து சலூன் கடைக்காரர் தற்கொலை  அந்தியூரை சோ்ந்தவர்
x

அந்தியூரை சேர்ந்த சலூன் கடைக்காரர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

அந்தியூரை சேர்ந்த சலூன் கடைக்காரர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சலூன் கடைக்காரர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடு (வயது 48). இவர் அங்கு சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடு சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது.

இதனை தனது மூத்த மகன் சூர்யாவிடம் அடிக்கடி கூறி வந்தாராம். 2 மகன்களும் தந்தையிடம் கடனை செலுத்தி விடலாம் என ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டில் படுத்து தூங்கியவர் மறுநாள் காலையில் காணவில்லை. மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

விசாரணை

இது ஒருபுறம் இருக்க பள்ளிபாளையம் ஜனதா நகர் காவிரி கரையோரத்தில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஈரோடு மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீசார் அளித்த தகவலின்பேரில் சூர்யா தரப்பினர் பள்ளிபாளையம் வந்தனர். பின்னர் காவிரி கரையில் இறந்தது கிடந்தது வெங்கடு என உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கடன் செலுத்த முடியாமல் தவித்த வெங்கடு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


Next Story