விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு என்ற பாலகிருஷ்ணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story