விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் கருமலைக்கரடு உள்ளது. இந்த கரட்டில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவர் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த முதியவர் கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சி தெகவாய்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கையன் என்பதும், இவரை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று அவருடைய மனைவி பார்வதி போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது. மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கையன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story