தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் புல்லையா (வயது 38). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் புல்லையா கோட்டையூர் செல்லும் வழியில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார், புல்லையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story