தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை


தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை
x

கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள தாவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 26). தனியார் நிறுவன மேலாளர். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அம்ருதா (வயது 20) என்ற மனைவி உள்ளார். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்த நாகராஜை பெற்றோர் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உறவினா்கள் அவரை மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story