அய்யம்பாளையம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
அய்யம்பாளையம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
அய்யம்பாளையம் அருகே உள்ள மு.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் அருண் (வயது 24). இவர் முட்டை லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு சாய்அத்விக் என்ற ஒரு மகன் உள்ளான். அருண் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் தனது மனைவி, மகனை புதன்சந்தையில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு விட்டு வந்தார். பின்னர் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருண் பலியானார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.