வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டை உளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பசுவராஜ். இவருடைய மகன் பவன்குமார் (வயது 25). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதில் விரக்தியடைந்த பவன்குமார் வீட்டின் அருகே விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவன்குமார் பலியானார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story