சூளகிரி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


சூளகிரி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் சுரேஷ் திடீரென தான் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story