திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை


திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை
x

சென்னிமலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நர்சு

சென்னிமலை அருகே உள்ள சில்லாங்காட்டுவலசை சேர்ந்தவர் நடராஜ். இவர் தற்போது சென்னிமலை பொறைன்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் இந்திரா (வயது 27). இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்திராவுக்கு அவரது தந்தை நடராஜ் வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்திராவுக்கு எந்த வரனும் அமையவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த இந்திரா தனக்கு திருமணமே வேண்டாம் என வீட்டில் கூறி வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று இந்திராவின் தந்தை நடராஜ் தனது மனைவியுடன் சில்லாங்காட்டுவலசில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் இந்திராவும் அவருடைய அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணனும் வீட்டில் இருந்தனர்.

அப்போது வீட்டில் உள்ள சமையல் அறைக்கு இந்திரா சென்றார். பின்னர் அவர் அங்குள்ள மின் விசிறியில் தாவணியால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைக்கண்டதும் அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணன், தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்தும் அவர்கள் உடனடியாக வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் இந்திராவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இந்திரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து இந்திராவின் தந்தை நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story