சித்தோட்டில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை; கணவர் இறந்த துயரத்தில் விபரீத முடிவு


சித்தோட்டில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை; கணவர் இறந்த துயரத்தில் விபரீத முடிவு
x

சித்தோட்டில் கணவர் இறந்த துயரத்தில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

பவானி

சித்தோட்டில் கணவர் இறந்த துயரத்தில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்த துயரம்

பவானி அருகே உள்ள சித்தோடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 68). இவருடைய மனைவிகள் காளியம்மாள், பழனியம்மாள் (58). இதில் காளியம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், பழனியம்மாளுக்கு முருகேசன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். பழனியம்மாள் அதே பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார்.

முருகேசன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெருமாள் இறந்தார். இதனால் பழனியம்மாள் தனியாக வசித்து வந்தார். கணவர் இறந்த துயரத்தை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. மனவேதனையுடன் காணப்பட்டு் வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை பழனியம்மாள் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story