ஊத்தங்கரை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை


ஊத்தங்கரை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). கூலித் தொழிலாளி. சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த முனுசாமி, அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர், கடந்த 1-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து முனுசாமி மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story