சூளகிரி அருகே விவசாயி தற்கொலை


சூளகிரி அருகே விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா (வயது 26). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவருடைய மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையில் இருந்த எல்லப்பா, கடந்த 4-ந் தேதி கட்டிகானப்பள்ளியில் வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் எல்லப்பா இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story