பவானி அருகே ஜவுளி நிறுவன உாிமையாளர் தற்கொலை; கடன் பிரச்சினையால் விபரீத முடிவு


பவானி அருகே ஜவுளி நிறுவன உாிமையாளர் தற்கொலை; கடன் பிரச்சினையால் விபரீத முடிவு
x

பவானி அருகே கடன் பிரச்சினையால் ஜவுளி நிறுவன உரிமையாளர் தற்ெகாலை செய்துகொண்டார்.

ஈரோடு

பவானி

பவானி அருகே கடன் பிரச்சினையால் ஜவுளி நிறுவன உரிமையாளர் தற்ெகாலை செய்துகொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடன் பிரச்சினை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள திப்பிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் ஜெயந்த்நாதன் (வயது 36). இவர் பவானி புதிய பஸ் நிலையம் காவேரி வீதியில் தனியாருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து அதில் ஆயத்தஆடை ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார். இங்கு 25-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயந்த்நாதன் தொழிலை விரிவு படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியுள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் அவருடைய மனைவியும் அவரை பிரிந்து திப்பிசெட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் கடந்த சில மாதங்களாகவே ஜெயந்த்நாதன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்துள்ளனர்.

அப்போது நிறுவனத்தின் முன்பக்க ஷட்டர் திறந்து கிடந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஜெயந்த் நாதன் இரும்பு கம்பியில் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனே இதுபற்றி பவானி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜெயந்த் நாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story