விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நத்தம் கோவில்பட்டியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்று இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கோட்டைச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டைச்சாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story