குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). இவர் வீட்டின் முன்பு சில்வர் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், திருப்பத்தூரை சேர்ந்த குணசேகரி என்பவருக்கும் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜ்குமார் தனது பட்டறையில் இருந்த திராவகத்தை(ஆசிட்) குடித்துவிட்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story