13 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: சிறை தண்டனைக்கு பயந்து லாரி டிரைவர் தற்கொலை


13 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: சிறை தண்டனைக்கு பயந்து லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே 13 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட லாரி டிரைவர், சிறை தண்டனைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓரினச்சேர்க்கை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த வெள்ளிச்சந்தை காமராஜர் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 44). லாரி டிரைவர். இவருக்கு ஒரு மனைவியும், கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது சிறுவனை மிரட்டி, கணேசன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவனின் தாய் மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கணேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த வழக்கு தர்மபுரி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறையில் இருந்த கணேசன் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் 13 வயது சிறுவனின் தாயாரிடம், தன் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி கூறி வந்தார். மேலும் நாம் சமாதானமாக போகலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. அதற்கு சிறுவனின் தாயார் மறுப்பு தெரிவித்தார். இதனால் தனக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது உறுதி என்று கணேசன் எண்ணினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கணேசன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர், சிறை தண்டனைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய உறவினர்கள் மகேந்திரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அவர் சிறை தண்டனைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்கோடு அருகே 13 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story