மகேந்திரமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மகேந்திரமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே உள்ள சீங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவருக்கு சவுந்தர்யா (வயது 23) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனையடைந்த சவுந்தர்யா வீட்டில் மின்விசிறியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகேந்திரமங்கலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் தற்கொலை தொடர்பாக உதவி கலெக்டர் ஜெயக்குமார் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story