தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
பெருந்துறை சீனாபுரத்தை அடுத்த கராண்டிபாளையம் அருகே உள்ள முருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (30). 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அபிநயா (5) என்ற மகளும், அபிஷேக் (3) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்து சத்யா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பழனிசாமி மனமுடைந்து வீட்டில் உள்ள சமையல் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.