கடத்தூர் அருகேகூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மொரப்பூர்:
கடத்தூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ரேகடஅள்ளி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாரியப்பன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.
விசாரணை
இதனை தொடர்ந்து நேற்று காலை மாரியப்பன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் மாரியப்பன் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற கடத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாரியப்பனின் மகன் மாதேஷ் கொடுத்த புகாரின்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.