விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள கொல்லநாயக்கனூரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சரசு (வயது 58). புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சரசு அதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story