சூளகிரியில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சூளகிரியில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் முரளி. இவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உதயசூரியன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story