கல்குவாரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
ஏரியூர்:
ஏரியூரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 33). கல்குவாரி தொழிலாளி. இவருக்கு நித்தியா என்ற மனைவியும், 3 வயதில் பிருந்தாவன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ராம்குமார் மின்விசிறியை மாட்டும் கொக்கியில் தூக்குப்போட்டு கொண்டார். மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story