10-ம் வகுப்பு மாணவன் திடீர் தற்கொலை
10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..
பரமக்குடி,
10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..
மாணவன் தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சத்திரக்குடி அருகே உள்ள முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவேணி. இவர்களது மகன் சரண்குமார் (வயது 15). இவன் காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று சரண்குமாரை அவரது தாயார் நன்றாக படிக்க சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த சரண்குமார், வீட்டில் ஒரு அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கலைவேணி அந்த அறைக்கு சென்று பார்த்தபோது சரண்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கதறி அழுதார்.
போலீசார் விசாரணை
இது குறித்து சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மாணவன் சரண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சோக சம்பவம் தொடர்பாக கலைவேணி கொடுத்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.