புஞ்சைபுளியம்பட்டியில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தாய்- மகன் தற்கொலை
புஞ்சைபுளியம்பட்டியில் ஒரே சேலையில் தூக்குப்ேபாட்டு தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் ஒரே சேலையில் தூக்குப்ேபாட்டு தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட மேஸ்திரி
புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சரிதா (வயது 29). இவர்களுடைய மகன் பவன் கிருத்திக் (3). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜுக்கும், சரிதாவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடைய குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல கட்டிட வேலைக்கு செல்வராஜ் சென்றுவிட்டார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மனைவி சரிதாவும் மகன் பவன் கிருத்திக்கும் மின் விசிறியில் ஒரே சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கத்தினார்.
இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சரிதா தன்னுடைய மகன் பவன் கிருத்திக்குக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஆர்.டி.ஓ. விசாரணை
மேலும் இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் கூடுதல் கண்காணிப்பாளர் அஜ்மல், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி சோபியா ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரிதாவுக்கு திருமணம் ஆகி ஆகி 4 ஆண்டுகள் ஆவதால் இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.