மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விஷம் குடித்தார்
சிவகங்கை வண்டவாசியை அடுத்துள்ள ஆரியபவன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 47). இவர் ஜம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி சண்முகவள்ளி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நம்பிராஜன் ஒரு மாத விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நம்பிராஜன், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பரிதாப சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நம்பிராஜன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிவகங்கை நகர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார். நம்பிராஜன் தற்கொலைக்கான பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.