தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புது வீடு கட்டி அதில் குடும்பத்தினருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சீனிவாசன் வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story