பாப்பாரப்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள கே.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 72). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த வெங்கடாசலம் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story