தர்மபுரியில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை


தர்மபுரியில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சரவணன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story