கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி தாலுகா பெரியகோட்டப்பள்ளி அருகே உள்ள சின்ன கொட்டப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தமிழரசன் (வயது 19). தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மாணவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி தற்கொலை
தேன்கனிக்கோட்டை தாலுகா நொகனூர் பக்கமுள்ள மரக்கட்டாவை சேர்ந்தவர் ஹரீஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் கடன் தொல்லையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.