லாரி டிரைவர் தற்கொலை


லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர் அருகே உள்ள கொடமாண்டப்பட்டி கூட்டு ரோட்டை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). லாரி டிரைவர். இவர் பழைய லாரி ஒன்றை விலைக்கு வாங்க முடிவு செய்தார். இதற்காக தேவையான தொகையை அவரால் தயார் செய்ய முடியவில்லை. இதில் மனமுடைந்து காணப்பட்ட சங்கர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story