விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் வாசி (வயது50). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் திடீரென பூச்சி மருந்தை குடித்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வாசி உயிரிழந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story