கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ரூபேஷ் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.
இந்த நிலையில் ரூபேஷ் கடந்த 2-ந் தேதி கல்லூரிக்கு செல்லவில்லையாம். இதுகுறித்து அவருடைய தாயார் கேட்டு கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரூபேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story