மது பழக்கத்தை கைவிட முடியாததால் விரக்தி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மது பழக்கத்தை கைவிட முடியாததால் விரக்தி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில், தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மது குடிக்கும் பழக்கம்

பள்ளிபாளையம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (32). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி காலை வீட்டில் திடீரென மணிகண்டன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து சாந்தி விசாரித்த போது, 'மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாததால், வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து விட்டேன்' என்று மணிகண்டன் கூறினார்.

தற்கொலை

இதனை கேட்டு பதறிப்போன சாந்தி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிகண்டனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பலியானார். இந்த தற்கொலை குறித்து சாந்தி பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story