கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி மனைவி கணவரிடம் கோபித்து கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரபாகரன் விஷம் குடித்தார். இதையடுத்து உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story