பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

அஞ்செட்டி அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

பிளஸ்-2 மாணவி

அஞ்செட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மன்னார். விவசாயி. இவரது மகள் காளியம்மாள் (வயது 18). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்று அவர், தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

மருத்துவ படிப்பு படிக்க அதிக செலவாகும் என்பதால் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காளியம்மாள் மனவேதனை அடைந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த காளியம்மாள் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காளியம்மாள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திவீர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர் மறுத்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story