காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்பெண் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்பெண் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை
x
சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் மேல்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திலகவதி (26), கார்த்திகா என்ற 2 மகள்களும், பாஸ்கரன் என்ற மகனும் இருந்தனர். இதில் திலகவதி கடந்த 10 மாதங்களாக பொதுப்பணித்துறையில் மூத்த வரைவு அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திலகவதி கடந்த 4 ஆண்டுகளாக மணியனூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அந்த வாலிபர் குறித்து விசாரித்தபோது அவருடைய பழக்கவழக்கம் சரி இல்லை என தெரியவந்துள்ளது.

விசாரணை

இதனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேற்றோர் மகளின் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதில் மனமுடைந்த திலகவதி கடந்த 11-ந் தேதி விஷம் குடித்து வாந்தி எடுத்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திலகவதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக முருகன் ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story