தளி அருகே பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தளி அருகே உள்ள தேவர்பெட்டாவை சேர்ந்தவர் பசுவராஜ். இவரது மகள் அனிதா (வயது23). இவருக்கும், பசவன்தொட்டியை சேர்ந்த ஆரத்யகுமார் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அனிதா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 6 ஆண்டுகளில் இறந்துள்ளதால் இது குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிவிசாரணை நடத்தி வருகிறார்.
Next Story