தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

ஆரணி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 28), இவர் ஆரணி அருகே சேவூர் பகுதியில் ரெடிமேட் ஜவுளி கடை நடத்தி வந்தார். வியாபாரம் போதிய அளவு இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் விக்னேஷ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதனை அவரது தாய் சசிகலா தட்டி கேட்டு, கண்டித்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விக்னேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் சசிகலா புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story