வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

இரணியல் அருகே தாயாரிடம் செல்போனில் கூறி விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே தாயாரிடம் செல்போனில் கூறி விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செல்போனில் தகவல்

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சுனிதா. இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் ஆகாஷ் (வயது 19). இவர் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு கடல் சார்ந்த சான்றிதழ் படிப்பை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சுனிதாவுக்கு ஆகாஷ் செல்போன் மூலம் பேசினார். அப்போது 'தனக்கு வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்' என ஆகாஷ் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிதா, உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே வீட்டுக்கு சென்று மகனை காப்பாற்றும்படி கூறினார்.

அதைத்தொடர்ந்து உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஆகாஷ் சேலையில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக . அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி சுனிதா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story