மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை


மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை
x

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராம மலைகோவில் தெரு மூனுகொட்டாய் பகுதியில் வசித்தர் ராஜேந்திரன் (வயது 59). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பாதிப்பு அதிகமானதால் வீட்டு முன்பு இருந்த புளிய மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது தொடர்பாக ராஜேந்திரன் மகன் ஜெயமுருகன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story